\
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல்
Published on

ராஜீவ் கொலை வழக்கில் மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். சிறையிலுள்ள ரவிச்சந்திரன் மற்றும் அவரது தாய் தரப்பில் ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்கி வழங்கி உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தபோது கோரிக்கை மனு மற்றும் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோலில் வெளியே செல்ல தமிழக சிறைத்துறை உத்தரவை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை காலை 8 மணி அளவில் மதுரை மத்திய சிறையில் இருந்து ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வர உள்ளார்.

ரவிச்சந்திரனுக்கு குடும்பத்தினரை சந்திப்பது மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக பரோல் வழங்கவேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த நிலையில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவு மற்றும் முதல்வரிடம் கோரிக்கை மனு வைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக ரவிச்சந்திரனுக்கு உடனடியாக 30 நாள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 15 ஆம் தேதியான நாளை வெளியே வரும் அவருக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதி வரைக்கும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com