ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 10வது முறையாக ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 10வது முறையாக ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 10வது முறையாக ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 10-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த 1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை பொய்யாழி இறந்த நிலையில், தாயார் ராஜேஸ்வரி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது வேளாண் நிலத்தை பராமரிக்கவும், தனக்கு வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்க தனது மகன் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்கக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் அளித்த பரிசீலனையின் அடிப்படையில் தமிழக உள்துறை ரவிச்சந்திரனுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்கியது.

இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன் தூத்துக்குடியில் தனது தாயார் வசிக்கக்கூடிய சூரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே ரவிசந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவ ஓய்வில் உள்ளார். இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் 9 முறை பரோல் நீட்டிப்பு செய்த நிலையில் நாளை பரோல் காலம் முடிவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று 10-வது முறையாக மேலும் ஒரு மாதம் அதாவது வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை பரோல் நீட்டிப்பு அளித்து சிறை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com