நல்லக்கண்ணு உடல்நிலை குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அறிக்கை
நல்லக்கண்ணு உடல்நிலை குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அறிக்கைweb

நல்லக்கண்ணு உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லக்கண்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நேற்று வருடைய உடல்நிலை கவலைக்கிடமாக மாறியதாக தகவல் வெளியானது.
Published on

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து முதல் முறையாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

அந்த அறிக்கையில், 101 வயதான நல்லகண்ணு நோய் தொற்று மற்றும் ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நல்லகண்ணுக்கு பல்வேறு மருத்துவத்துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா. நல்லக்கண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரா. நல்லக்கண்ணுPt web

நேற்று அவருடைய உடல் நிலையில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு நல்லகண்ணுக்கு செயற்கை சுவாச கருவி சிகிச்சை மற்றும் மருத்துவ நிபுணர்களின் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நல்லகண்ணுவின் உடல் நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன் 24 மணி நேரத் தொடர் அதி தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com