\
திமுகவில் சமீபத்தில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு புதிய பொறுப்பு

திமுகவில் சமீபத்தில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு புதிய பொறுப்பு

திமுகவில் சமீபத்தில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு புதிய பொறுப்பு
Published on

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், அக்கட்சியின் ஊடக பிரதிநிதியாகவும் இருந்தவர் ராஜீவ் காந்தி. கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அக்கட்சியிலிருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைந்தார்.

தற்போது திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், ராஜீவ் காந்தியை திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக நியமித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com