\
ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு

ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு

ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் - உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், தன்னுடைய மகனின் திருமணத்திற்காக 30 நாட்கள் பரோல் வேண்டுமென சிறைத்துறையிடம் மனு அளித்தார். ஆனால் அவர் மனுவை சிறைத்துறை பரிசீலிக்கவில்லை. இதனையடுத்து ராபர்ட் உயர் நீதிமன்றத்தை நாடி மனு அளித்தார்.

அதில், பரோல் கேட்டு தான் விண்ணப்பித்ததாகவும், ஆனால் சிறைத்துறை பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே பரோலில் வெளியே சென்ற நளினிக்கு விதித்த கட்டுப்பாடுகளை ராபர்ட்டும் கடைபிடிக்கும் வேண்டுமென உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com