வேலூர் சிறையில் நளினி மற்றும் முருகன் 5 நாட்களாக உண்ணாவிரம் 

வேலூர் சிறையில் நளினி மற்றும் முருகன் 5 நாட்களாக உண்ணாவிரம் 

வேலூர் சிறையில் நளினி மற்றும் முருகன் 5 நாட்களாக உண்ணாவிரம் 
Published on

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி, ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன் இருவரும் 5 வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி கடந்த 28-ம் தேதி முதல் கடந்த 5 வது நாள்களாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்க்கொண்டு வருகிறார். தனது விடுதலையில் தாமதம் மற்றும் அவரது கணவர் முருகனின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவரது சிகிச்சைக்காக சென்னை வரும் போது அவரைக் கவனித்துக் கொள்ள பரோல் கேட்டு அதிலும் தாமதம் என சில காரணங்களை முன்வைத்து அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். 

இதனைஒயொட்டி அவர் தன்னை கருணைக் கொலை செய்யக்கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டு சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் வேலூர் சிறையில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவர் துன்புறுத்தப்படுவதால் தங்களை புழல் சிறைக்கு மாற்றக்கோரியிருந்தார். அதனை சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. 

இதனால் எங்கள் இருவரையும் பெங்களூர் சிறை அல்லது வேறு மாநில சிறைக்கு மாற்றக்கோரி தமிழக உள்துறைச் செயளருக்கு மனு அவர் அனுப்பியுள்ளார். அதேபோல் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகனும் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.  சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நளினி, மற்றும் முருகனிடம் சிறை துறையினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com