நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகி ராஜீவ்காந்தி விலகல்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகி ராஜீவ்காந்தி விலகல்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகி ராஜீவ்காந்தி விலகல்
Published on

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அது ஒரு பேரின்பக் கனாக்காலம், அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இவரும், மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரமும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் விளக்கமளித்த கல்யாண சுந்தரம், கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தியின் விலகலுக்கான காரணம் குறித்து கேட்க முயன்றபோது, ராஜீவ்காந்தி தரப்பிலோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com