மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்: அனிதாவுக்கு நடந்தவை துரதிஷ்டவசமானவை’ எனத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராட்டம் நடத்திய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.