\
எழுச்சி ஏற்பட்ட பின்னரே அரசியல் - ரஜினியின் சூசகம்

எழுச்சி ஏற்பட்ட பின்னரே அரசியல் - ரஜினியின் சூசகம்

எழுச்சி ஏற்பட்ட பின்னரே அரசியல் - ரஜினியின் சூசகம்
Published on

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் தன்னுடைய எதிர்கால திட்டம் குறித்து பேசினார். குறிப்பாக கட்சி தொடங்கினால் தான் பின்பற்றப்போகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அதில், ''முதல்வர் பதவியை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் நான் அரசியலுக்கு வருவேன். ரஜினி முதலமைச்சர் இல்லை என பட்டி தொட்டியெங்கும் எழுச்சி ஏற்படுத்துங்கள். மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பின் நான் அரசியலுக்கு வருகிறேன். 45 வயதுக்குள் இளைஞர்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள், ரஜினியின் பேச்சு அவர் தற்போதைக்கு அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதையே காட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com