உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஓபிஎஸ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இதனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பேச்சு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதற்கு பிறகு வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என தெரிவித்தார்.