திறக்கவே இல்ல...சொத்துவரியா ? ரஜினிகாந்த் வழக்கு

திறக்கவே இல்ல...சொத்துவரியா ? ரஜினிகாந்த் வழக்கு
திறக்கவே இல்ல...சொத்துவரியா ? ரஜினிகாந்த் வழக்கு

பொதுமுடக்க காலத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்த திருமண மண்டபத்திற்கு விதித்த சொத்துவரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து ரஜினியின் சட்ட ஆலோசகர் விஜயன் சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ரஜினிகாந்த் தனது திருமணம் மண்டபத்துக்கு முறையாக சொத்து வரி செலுத்தி வருகிறார். கடைசியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்து வரி கட்டியுள்ளார்.

பின்னர், தொற்று நோய் காரணமாக மத்திய மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அமல்படுத்தியது. இதைத்தொடந்து திருமண மண்டபம் காலியாக இருந்தது. மார்ச் 24 முதல் யாருக்கும் வாடகைக்கு விடவில்லை. அனைத்து முன்பதிவுகளையும் ரத்து செய்து பணம் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் சென்னை மாநகராட்சி, ரஜினிகாந்தின் திருமண மண்டபத்திற்கு ஏப்ரல் - செப்டம்பர் மாதத்திற்கான சொத்து வரியாக 6.50 லட்சத்தை கட்ட வேண்டும் என கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இன்வாய்ஸ் அனுப்பியுள்ளது.

எனவே பொதுமுடக்க காலத்தில் காலியாக இருந்த திருமண மண்டபத்திற்கு விதித்த சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என எனது மனுதாரர் கோரியுள்ளார். மேலும் இதுகுறித்து சென்னை மாநகராட்சிக்கு கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியே மனுதாரர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இதுவரை அதுகுறித்து பதில் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com