\
மோசடியில் ஈடுபடுவதா? - அதிரடியாய் நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி

மோசடியில் ஈடுபடுவதா? - அதிரடியாய் நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி

மோசடியில் ஈடுபடுவதா? - அதிரடியாய் நீக்கப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகி
Published on

மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.

பால நமச்சிவாயம் என்பவர் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இவர்மீது அண்மையில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ரஜினிகாந்த் ரசிகர் அல்லது மக்கள் மன்றத்தின் சார்பில் இருந்து, இவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பால நமச்சிவாயம் மன்ற விதிகளுக்கு முரணாக செயல்படும் காரணத்தால் மன்றத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். அவருடன் மன்ற நிர்வாகிகள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com