நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணி மீண்டும் தொடங்கவுள்ளது.
கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து விரைவில் முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’’ என ட்வீட் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர்
கட்சி மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமிக்கிறேன்” எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சிக்கு பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் பணி மீண்டும் தொடங்கவுள்ளது. மேலும் தனது மக்கள் மன்றத்தை ரஜினிகாந்த் துரிதப்படுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 47,250 பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து புதிய உறுப்பினர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் மீதமுள்ள பூத் கமிட்டி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க ரஜினிகாந்த் உத்தரவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த ஆலோசனையில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி கட்சி நடவடிக்கை குறித்து கேட்டறிந்து வருகிறார்.