\
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் - சென்னையில் ரசிகர்கள் போராட்டம்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் - சென்னையில் ரசிகர்கள் போராட்டம்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் - சென்னையில் ரசிகர்கள் போராட்டம்
Published on: 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் உடல்நிலை காரணமாக அந்த முடிவை கைவிட்டார். ஆனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி, சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே அறப் போராட்டத்தில் ஈடுபடுவதென அவரது ரசிகர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்துக்கு ரசிகர்கள் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். அதை ஏற்ற காவல்துறை, 36 நிபந்தனைகளுடன் இப்போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டுமெனத் தெரிவிக்கபட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com