\
ரஜினி மகள் கார் ஆட்டோவில் மோதி விபத்து

ரஜினி மகள் கார் ஆட்டோவில் மோதி விபத்து

ரஜினி மகள் கார் ஆட்டோவில் மோதி விபத்து
Published on: 

நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா சொகுசு காரில் சென்றபோது ஆட்டோ மீது மோதி விபத்து‌ நேரிட்டது.

போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சௌந்தர்யா திரும்பிக் கொண்டிருக்கையில், முர்ரே கேட் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது அவரது கார் மோதியது. விபத்தில், ஆட்டோ சேதம் அடைந்ததோடு ஓட்டுநருக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நடிகர் தனுஷ், ஆட்டோ ஓட்டுநரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பணம் கொடுத்து சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com