“நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர்”- ஆலோசனையில் ரஜினியிடம் நிர்வாகிகள் திட்டவட்டம்

“நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர்”- ஆலோசனையில் ரஜினியிடம் நிர்வாகிகள் திட்டவட்டம்

“நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர்”- ஆலோசனையில் ரஜினியிடம் நிர்வாகிகள் திட்டவட்டம்
Published on

கட்சி தொடங்கினால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது கட்சி தொடங்கினால் உருவாகும் சாதக பாதககங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்து வருகிறார். அப்போது கட்சி ஆரம்பித்தால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும் நிர்வாகிகளுடனான சந்திப்புக்கு பின் நிர்வாகிகள் அல்லது ரஜினி தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஏதேனும் தெரிவித்தால்தான் உறுதியாக சொல்ல முடியும்.

இருப்பினும், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், இப்போது அறிவிக்காவிட்டால் நிச்சயம் ரஜினி இனிமேல் அரசியலுக்கு வரவேயில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com