\
“அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” - ரஜினிகாந்த் பேட்டி

“அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” - ரஜினிகாந்த் பேட்டி

“அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” - ரஜினிகாந்த் பேட்டி
Published on: 

அரசியல் பிரவேசம் குறித்த தனது முடிவை விரைவில் வெளியிடுவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி தொடங்கினால் சாதக பாதககங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு மண்டபத்தின் பால்கனியில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் கையசைத்தார்.

பின்னர், சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் “மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு நடந்தது. அவர்களுடைய கருத்தை சொன்னார்கள். நானும் எனது பார்வையை சொன்னேன். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம் எனத் தெரிவித்தார்கள். நான் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வெளியிடுவேன்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com