“ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லாட்சி தருவார்” - சகோதரர் சத்திய நாராயணா

“ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லாட்சி தருவார்” - சகோதரர் சத்திய நாராயணா
“ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லாட்சி தருவார்” - சகோதரர் சத்திய நாராயணா

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லாட்சி தருவார் என அவரின் அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.  

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை புகழ் பெற்ற கால பைரவர் திருக்கோயிலில் நடிகர் ரஜினகாந்த் அண்ணன் சத்திய நாராயணன் தனது குடும்பத்துடன் வந்து சிறப்பு யாக பூஜை செய்து, சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சத்திய நாராயணன்,

“இந்தக் கோயிலுக்கு நாங்களாகவே வரவில்லை. கடவுள் அருளால், கால பைரவரே எங்களை அழைத்தார். அதனால் இங்கு வந்தோம், சிறப்பு பூஜை செய்துள்ளோம்” என்றார். மேலும் “ ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். மக்களுக்கு ரஜினிகாந்த் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. மக்களுக்கு நல்லாட்சி தருவார். அவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதர், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார். மக்களுக்கு பிரச்னை என்றால், நேரடியாக சென்று மக்களை சந்திப்பார்”என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com