அர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு

அர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு
அர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி கட்சியில் சேர்ந்ததால் பாஜக அறிவிப்பு

ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தியுடன் பாஜகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்.

இப்போது வருவார் அப்போது வருவார் என்று எதிர்பாக்கப்பட்ட ரஜினி இன்று தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார். ’ஜனவரியில் கட்சி துவக்கம். 31 ஆம் தேதி கட்சி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்போவும் இல்ல’ என்று கூறியிருப்பதோடு ’வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான ஊழலற்ற, சாதிமதமற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அதிசயம்; அதிசயம் நிகழும்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியை தான் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்தார் ரஜினி. இதனை அனைவரும் விமர்சித்துவந்த நிலையில், பாஜக அர்ஜுன மூர்த்தியை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளது. அவரும், பாஜகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதனை, பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன் ஏற்றுக்கொண்டு வெளியிட்ட அறிக்கையில்,

     “தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியின் ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com