ரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்து சொன்ன ரஜினி!

ரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்து சொன்ன ரஜினி!
ரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்து சொன்ன ரஜினி!

பொங்கல் பண்டிகையையொட்டி தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து கூறினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் முன்பு அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கூறும் வகையில் வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி, அவர்களுக்கு வணக்கம் சொல்லி, வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் பொங்கலை கொண்டாடும் வகையில் அவர் வேட்டி, சட்டை அணிந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் செழிப்புடன் சிறப்பாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றும், தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

முன்னதாக ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து கூறியிருந்த ரஜினிகாந்த், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com