ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை

ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை
ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அர்ஜுன மூர்த்தி மற்றும் தமிழருவி மணியனுடன் ராகவேந்திர மண்டபத்தில் ரஜினிகாந்த் நேற்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது புதிய கட்சியை எங்கு தொடங்குவது, மாநாட்டை எங்கு அமைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. மேலும், போஸ்டரில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், சுதாகர் புகைப்படம் இடம்பெறக்கூடாது எனவும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருவதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com