\
ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் நிச்சயம் தோற்பார்: அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன்

ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் நிச்சயம் தோற்பார்: அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன்

ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் நிச்சயம் தோற்பார்: அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன்
Published on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என சாத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பேசி பரபரப்பை உருவாக்கியிருக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அனைத்து கட்சிகளின் சார்பிலும் ஆலோசனைக்கூட்டம், செயல் வீரர்கள் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சாத்தூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்,“ அமைச்சர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து தலைமை கழகத்திடம் புகார் அளிக்க உள்ளேன். விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அதிமுக தோற்றதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் காரணம். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டாலும் தோற்பது நிச்சயம்” என ஆவேசமாக பேசினார்.

கடந்த செப்டம்பர் மாதம் சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய  ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூலிப்படை வைத்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என பேசியிருந்தார். இவ்வாறு அவர் பேசிய சில நாட்களில் முதல் அமைச்சர் வருகை தந்து, இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதனடிப்படையில் இருவரும் சேர்ந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டனர்

தற்போது சட்டமன்ற உறுப்பினர் மீண்டும் அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினரின் இத்தகைய குற்றச்சாட்டு விருதுநகர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com