\
Rajendra Balaji Predicts End of TVK Government
ஸ்டாலின் - ராஜேந்திர பாலாஜிPt web

”ஸ்டாலினுக்கு கோபம் வந்தால்.. தவெக ஆட்சி முடிந்துவிடும்” - அதிமுக ராஜேந்திர பாலாஜி

எந்த நேரம் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறதோ அப்போது தவெக ஆட்சி முடிந்துவிடும்; அவருக்கு கோபம் வரணும்; வரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வென்று விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை ஆண்டு வந்த திமுக மற்றும் அதிமுக முறையே 2 மற்றும் 3-வது இடத்திற்கு செற்றிருக்கின்றன. இதற்கிடையில், அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணி இணைந்து ஆட்சியமைக்கப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. அதிமுக மூத்த நிர்வாகிகளே இதை உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும், அவ்வாறு நடக்கவில்லை, நீண்ட இழுபறிக்குப் பிறகு, தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பெற்றிருக்கிறார்.

விஜய், ஸ்டாலின்
விஜய், ஸ்டாலின்x

எனினும், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் விரைவில் தவெக ஆட்சி கவிழும் எனப் பேசி வருகின்றனர். இதற்கு, தேர்தலின் போது, திமுக கூட்டணியில் இருந்த விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தவெக ஆட்சி 6 மாதத்தில் கவிழ்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் எனத் தெரிவித்ததுடன் திருச்சி சிவா மத்திய அமைச்சராவார் எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சையடுத்து, மீண்டும் திமுக - அதிமுக - பாஜக கூட்டணி பேசப்படுகிறாதா? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தசூழலில் தான், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கும் கருத்துக்கள் அதிமுக - திமுக கூட்டணி என்பதற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. சிவகாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜேந்திரபாலாஜி, முதலாவதாக அதிமுகவில் இருந்து வெளியேறிவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜிpt web

தொடர்ந்து பேசிய கருத்துக்கள் தான் தற்போது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன. அதவாது, தவெகவின் வெற்றி நிலையான வெற்றி கிடையாது என்றும் உள்ளாட்சி தேர்தலில் தவெக-வுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள் எனக் கூறிய அவர், எந்த நேரம் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறதோ? அப்போது த.வெ.க. ஆட்சி முடிந்துவிடும், அவருக்கு கோபம் வர வேண்டும், வரும். அதுவரை தவெக ஆட்சி நீடிக்குமா? என பேசியிருக்கிறார். இவ்வாறு, ராஜேந்திர பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனி பேச்சு அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com