\
அந்தரத்தில் 178 ஆசனங்கள்: அசத்திய இளம்பெண்

அந்தரத்தில் 178 ஆசனங்கள்: அசத்திய இளம்பெண்

அந்தரத்தில் 178 ஆசனங்கள்: அசத்திய இளம்பெண்
Published on: 

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக, ராஜபாளையத்தை சேர்ந்த இளம் பெண் 178 யோகாசனங்களை செய்து காண்பித்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார்.

ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவை சேர்ந்த அஸ்வினி ராமராஜ் என்பவர், ஏரியல் யோகா எனப்படும் அந்தரத்தில் துணியை பிடித்தபடி செய்யும் கலையில் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு மணி 10 நிமிடங்களில் துணியின் உதவியோடு அந்தரத்தில் தொங்கியவாறு, ஏக பாதாசனம், பத்ம கோணாசனா, அருதனராசனம், பத்மாசனம், பர்வித ஆசனா, நின்ற பாதாசனா உள்ளிட்ட 178 ஆசனங்களை செய்து காண்பித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com