சம்பள பணத்தை சலவை தொழிலாளிகளுக்கு தானமாக வழங்கிய எம்எல்ஏ 

சம்பள பணத்தை சலவை தொழிலாளிகளுக்கு தானமாக வழங்கிய எம்எல்ஏ 
சம்பள பணத்தை சலவை தொழிலாளிகளுக்கு தானமாக வழங்கிய எம்எல்ஏ 

ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் தனது 4 மாத ஊதியம் ரூ. 4.20 லட்சத்தை சலவை மற்றும் முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக வழங்கினார்.

ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் தனக்கு வரும் மாத ஊதியத்தை ஏழை மக்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள், மலைவாழ் மக்கள், மாணவர்கள் போன்றோருக்கு நலத் திட்டங்களாக வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக கடந்த 4 மாத ஊதியத்தை சலவை மற்றும் முடித் திருத்தும் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்கினார்.

நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சலவை மற்றும் முடித் திருத்தும் தொழிலாளர்கள், பொது மக்கள் மற்றும் கட்சியினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 50 சலவை மற்றும் இஸ்திரி நிலையம் நடத்தும் தொழிலாளர்களுக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பித்தளை இஸ்திரி பெட்டிகளையும், 200 முடித் திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள முடித் திருத்தும் உபகரணங்கள் அடங்கிய பெட்டிகளையும் வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com