மாமன்னர் ராஜராஜசோழன் அரியணை ஏரிய நாளான சதயவிழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று கொண்டாடப்படுகிறது.
கி.பி 985ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ராஜராஜ சோழனுக்கு முடிசூட்டப்பட்டதை நினைவுகூறும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஆயிரத்து 32வது சதய விழாவையொட்டி, ராஜராஜசோழனின் சிலை, பெரியகோவிலில் முகப்பு பகுதி ஆகியவை மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழா தொடர்ந்து 2 நாட்களுக்கு நடைபெறுகிறது.