\
விடிய விடிய மழை.. குளிர்ச்சியானது சென்னை!

விடிய விடிய மழை.. குளிர்ச்சியானது சென்னை!

விடிய விடிய மழை.. குளிர்ச்சியானது சென்னை!
Published on

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு தொடங்கி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் கோடை காலத்திற்கு பின்னரும் வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த மழை தொடர்ந்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், போரூர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. இதேபோல், பல்லாவரம், மீனம்பாக்கம், மதுரவாயல், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com