தமிழ்நாடு
கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, டிவிஎஸ் நகரில் சாலைகளில் மழைநீர் தேக்கம்
கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, டிவிஎஸ் நகரில் சாலைகளில் மழைநீர் தேக்கம்
சென்னையில் பெய்து வரும் கனமழையில் கொரட்டூர் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு மற்றும் டிவிஎஸ் நகரில் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை கொரட்டூர் டிவிஎஸ் நகர் சாலையில் நான்கு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி மக்கள் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் பெரும் அளவில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கையை முடங்கியுள்ளது.
மழை நீரோடு கழிவு நீரும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. அம்பத்தூர் மண்டல 7 அதிகாரிகள் மழை நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.