\
புரெவி புயல்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை!

புரெவி புயல்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை!

புரெவி புயல்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை!
Published on

புரெவி புயலின் தாக்கம் காரணமாக, சென்னையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இலங்கையில் புரெவி புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. புரெவி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி,திருச்சி,ராமேஸ்வரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது.

சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் மழை பெய்தது. இரவு 10 மணிக்குப் பின் தொடங்கிய மழை, இரவு முழுவதும் விட்டுவிட்டு பொழிந்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி, பாரிமுனை, ராயபுரம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த வண்ணம் இருந்தது.

தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. செம்பரம்பாக்கம், திருவேற்காடு, திருமுல்லைவாயல், பட்டாபிராம் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றிரவு மழை பொழிந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com