\
தமிழகத்தில் பரவலாக கனமழை: இன்றும் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பரவலாக கனமழை: இன்றும் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பரவலாக கனமழை: இன்றும் மழைக்கு வாய்ப்பு!
Published on: 

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

முன்னதாக, வானிலை அறிக்கை வெளியிட்ட ஆய்வு மையம், ''வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18 வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்'' என தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com