தென் தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். மேலும் சென்னையை பொறுத்தவரை இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முதல் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்றும் கூறினார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.