\
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை!
Published on: 

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த
காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com