\
சுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை!

சுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை!

சுருளி அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை!
Published on: 

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக தேனி மாவட்டம் கம்‌பம், சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க தொடர்ந்து 3-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை போன்ற வன பகுதிகளில் கன மழை பெய்துள்ளதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி பல மாதங்களாக நீர்வரத்து இன்றி காணப்பட்டது. 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அருவியில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த அருவியில் குளிக்க தடை விதித்துள்ளதாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com