தமிழ்நாடு
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்கள் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் சுழல்காற்று வீசும் என்பதால் குமரிக் கடல் பகுதியில் மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்கள் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.