மூன்று நாட்கள் மழை பெய்யும் - வானிலை மையம்

மூன்று நாட்கள் மழை பெய்யும் - வானிலை மையம்

மூன்று நாட்கள் மழை பெய்யும் - வானிலை மையம்
Published on

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்திற்கு பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் நிலவி வரும் நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மட்டுமே லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் 13-ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 14ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com