தமிழ்நாடு
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. மற்ற இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வடமாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.