\
காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மழை தொடரும்

காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மழை தொடரும்

காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மழை தொடரும்
Published on

வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் மையம்கொண்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலையால், வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் கடற்காற்றின் திசையைப் பொறுத்து, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com