
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலில் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தின் கடலோர பகுதியில் உருவான குறைந்த அழுத்த தாழ்வுநிலை தற்போது வலுவிழந்துள்ள நிலையில், புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான அளவு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.