சென்னையின் பல இடங்களில் பரவலாக கன மழை !

சென்னையின் பல இடங்களில் பரவலாக கன மழை !

சென்னையின் பல இடங்களில் பரவலாக கன மழை !
Published on

சென்னையில் கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதேபோல்,  விருகம்பாக்கம், முகலிவாக்கம், கோடம்பாக்கம், தி நகர், அடையாறு, கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. துரைபாக்கம், சோழிங்கநல்லூர் கனமழை பெய்தது.

இதனிடையே, சென்னையில் பொழியும் மழை , கன மழையாக இருக்காது. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு  நின்று விடும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

“வெப்ப சலனம் காரணமாக சென்னையில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று பகலில் சென்னையில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தநிலையில்,வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாகவே தற்போது மழை பெய்கிறது. வெப்பச் சலனத்தின் காரணமாக மேற்கே  உருவான  மழை மேகங்களால்  தற்போது  மழை  பொழிகிறது. இதனால் தெற்கு  மற்றும்  மேற்கு சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது அண்ணாநகர், ஆதம்பாக்கம், ஆலந்தூர் ,கிண்டி, சைதாப்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைபொழிந்துவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com