சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் மழைநீர் புகுந்தது.
சென்னையில் கடந்த 2 தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோபாலபுரம் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலையில், கருணாநிதியின் இல்லத்தின் முன்பக்கத்திலும் தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனையறிந்து அங்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழைபெய்துக்கொண்டே இருந்ததால் பெரும் முயற்சிக்குப் பின்னரே தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.