சாலைகளின் தேங்கியுள்ள மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி
சாலைகளின் தேங்கியுள்ள மழைநீர் வாகன ஓட்டிகள் அவதிpt desk

திருவள்ளூர்: கொட்டித் தீர்த்த கனமழை – சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர்... வாகன ஓட்டிகள் அவதி...

செங்குன்றத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: எழில்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையின் அளவு 28 செமீ ஆக பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாதவரத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் நெடுஞ்சாலையில் வடபெரும்பாக்கம் பகுதியில் சாலையில் தண்ணீர் வெளியேற வழியின்றி சுமார் 1 கிமீ தூரத்திற்கு தேங்கியுள்ளது.

சாலைகளின் தேங்கியுள்ள மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி
சாலைகளின் தேங்கியுள்ள மழைநீர் வாகன ஓட்டிகள் அவதிpt desk

சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் சிரமத்துடன் கடந்து செல்கின்றன. இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி செல்கின்றன. சில வாகனங்களில் தண்ணீர் புகுந்து பழுதான காட்சிகளையும் காண முடிகிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாலைகளின் தேங்கியுள்ள மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர்: முகாமில் தங்கியுள்ளோரிடம் வீடியோ-கால் மூலம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com