\
சென்னையில் கொட்டி தீர்த்த மழை : குழந்தைகள் நல மருத்துவமனையில் புகுந்த நீர் - வீடியோ!

சென்னையில் கொட்டி தீர்த்த மழை : குழந்தைகள் நல மருத்துவமனையில் புகுந்த நீர் - வீடியோ!

சென்னையில் கொட்டி தீர்த்த மழை : குழந்தைகள் நல மருத்துவமனையில் புகுந்த நீர் - வீடியோ!
Published on

சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் பரபவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, வடபழனி, எம்.எம்.டி.ஏ, கோயம்பேடு, எழும்பூர், பாரிமுனை, மதுரவாயல், வானகரம், ராயப்பேட்டை, காசிமேடு, கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது

இதற்கிடையே எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மழைநீர் புகுந்தது. உடனே மழைநீர் அனைத்து வெளியேற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் எழிலரசி தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com