\
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Published on

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com