தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில், பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களான திண்டுக்கல், தென்காசி, வடக்கு கடலோர மாட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் 20ஆம் தேதியைப் பொருத்தவரையில், மேற்குத்தொடர்ச்சி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், தலா 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று முதல் வருகிற 22ஆம் தேதி வரை, தெற்கு வங்கக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com