hevay rain
hevay rainpt desk

“அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்; 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் நெல்லை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Published on

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல் உட்பட மொத்தம் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

hevay rain
"மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது.." - முதல்வர் ஸ்டாலின்

காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com