12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை வானிலை மையம் அளித்துள்ள தகவலில், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறி‌யுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனத்தில் 17 சென்டி மீட்டரும், மேலாலாத்தூர், ஆம்பூரில் தலா 12 சென்டி மீட்டரும், குடியாத்தத்தில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. இதுதவிர, தேவக்கோட்டை மற்றும் மதுரையில் தலா 8 சென்டி மீட்டரும், ராசிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டிபட்டியில் தலா 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com