தமிழ்நாடு
வெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்த வானிலை ஆய்வு மையம், இடியுடன் 30 - 40 கிமீ வேகத்தில் காற்றுடன் ஓரிரு இடத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, சேலம், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.