\
 தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் 

 தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் 

 தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் 
Published on: 

தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி‌ , காரைக்கால் பகுதிகளில் லோசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ வரும் 24 மணி நேரத்தில், காஞ்சிபுரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலூரில் 6 சென்டி மீட்டரும், கேளம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com