வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது குறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ,திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி மற்றும் நாகையில் பலத்த காற்று உடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை இருக்கும். திருச்சி, கரூர், சேலம், தருமபுரி மாவட்டத்தில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது.
அதனால் காலை 11.30 முதல் 3.30 மணி வரை வெளியே செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்” என தெரிவித்துள்ளது