உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்தது. இந்நிலையில் அதிகாலை முதல் சென்னையில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பாலவாக்கம், ஈ.சி.ஆர், திருவான்மியூர், விருகம்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு, வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

வெப்பத்தால் தவித்து வந்த நிலையில் திடீர் மழையாலும், காற்றாலும் சென்னை மக்கள் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com